ராஜநாகம் பாம்புகள் பொதுவாக கூடுகட்டி முட்டை இடும் வழக்கம் உண்டு. இது சுமார் 13 அடி முதல் 22 அடி நீளம் வரை வளரக்கூடியது.
மற்ற பாம்புகளை விட புத்தி கூர்மை உடையது. பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன.
இது ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் இறப்பு நேரிடும் வீதம் 75% வரை இருக்கும்.
ராஜநாகம் ஒரே நேரத்தில் 20 முதல் 30 முட்டைகள் வரை இடும். முட்டைகளை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவும், முட்டையின் வெப்பம் சீராக மாறாமல் இருக்கவும், காய்ந்த இலைகளைக் குவித்து அதனுள் முட்டைகளை வைத்திருக்கும்.
ராஜநாகம் அதிகமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படுகின்றன. இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் காணப்படுகின்றன.
யானைகளும் இது கடித்த 3 மணி நேரத்தில் இறந்து விடும். இதன் நஞ்சானது ஆப்பிரிக்க கறுப்பு மாம்பா பாம்புகளை விட 5 மடங்கு அதிகமானது.