தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனா தற்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

Instagram: rashmika_mandanna
சினிமா அனுபவங்கள் குறித்து ராஷ்மிகா மந்தனா ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
Instagram: rashmika_mandanna
எல்லாரையும் விட நான் தான் பெரிய அழகி என்ற உணர்வு எனக்கு எப்போதும் இல்லை. என்னைவிட அழகிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
Instagram: rashmika_mandanna
அதேபோல என்னை விட நன்றாக நடிப்பவர்களும் இருக்கிறார்கள். நான் அதிர்ஷ்டத்தை நம்புகிறேன்.
Instagram: rashmika_mandanna
உழைப்பும், அதிர்ஷ்டமும் இருந்தால் வெற்றி தானாக வந்துவிடும். எவ்வளவு உழைத்தாலும் அதிர்ஷ்டம் இல்லாவிட்டால் எதுவுமே சாதிக்க முடியாது.
Instagram: rashmika_mandanna
கவர்ச்சியின் எல்லை என்ன என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என்னை பாராட்டுவதையும் கேலி செய்வதையும் அனுபவிக்கிறேன்.
Instagram: rashmika_mandanna
என்னை பற்றி வரும் கிசு கிசுக்களை கண்டு கொள்வதே இல்லை. சினிமா எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
Instagram: rashmika_mandanna
பெயர், புகழ் போன்றவை ரசிகர்கள் காட்டும் அன்புக்கு முன்னால் சின்ன விஷயங்களாக தோன்றும்.
Instagram: rashmika_mandanna
என்னை விட அழகும் திறமையும் மிக்க நடிகைகள் பலர் இருந்த போதிலும் எனக்கே வாய்ப்புகள் வருவது சிறப்பு அம்சம் இல்லையா. இதற்கு முன்னால் மற்ற எல்லா பிரச்சினைகளுமே எனக்கு சிறியவையாக தோன்றும்.
Instagram: rashmika_mandanna