அடிக்கடி தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள்!

தலையைச் சுற்றியும் , முகத்தைச் சுற்றியும் ஏற்படும் வலியே தலைவலி ஆகும். சிலருக்கு வலி நெற்றியோடு நின்றுவிடும். சிலருக்கு முன்னந்தலை, பின்னந்தலை முழுவது

எரிச்சலடைந்த, சேதமடைந்த, வீக்கமடைந்த தலை நரம்புகள் தான் தலைவலியை உண்டாக்குகின்றன. சுமார் 150-க்கும் மேலான தலைவலி வகைகள் இருக்கின்றன.

மந்தமான வலி, தலையைக் கழட்டி வைத்துவிடலாம் போன்றதொரு வலி, விடாமல் தொடர்ந்து இருக்கும் வலி, ஊசியால் குத்துவது போன்றதொரு வலி என இப்படி வலிகள் பலவகையாக ஏற்படுவதுண்டு.

கடுமையான ஒற்றைத் தலைவலியை மைக்ரெயின் என்று மருத்துவ மொழியில் சொல்வதுண்டு. இது தினம் தினம் புதுப்புது பிரச்சினைகளினால் உண்டாகும் தலைவலி ஆகும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கலந்துள்ள நைட்ரேட் பொருள் , மதுவகைகளில் குறிப்பாக சிவப்பு ஒயின் , சிகரெட்டிலுள்ள நிகோட்டின் , கட்டுப்பாடில்லாத ரத்த ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு கடுமையான ஒற்றைத் தலைவலி ஏற்படும்.

சரியாக போதுமான நேரம் தூங்காதவர்கள், எந்நேரமும் கம்ப்யூட்டர் , லேப்டாப், செல்போன் , டிவி உபயோகிப்பவர்கள், அடிக்கடி தொடர்ந்து தும்முபவர்கள், அடிக்கடி தொடர்ந்து இருமுபவர்கள், இவர்களுக்கெல்லாம் தலைவலி அடிக்கடி வந்துபோக வாய்ப்புண்டு.

சிறுநீரகம், மூளை போன்றவற்றுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டாலும் கடுமையான தலைவலி ஏற்படும்.

பிடிக்காத சென்ட் , பிடிக்காத உணவு, பிடிக்காத பொருட்கள் போன்றவற்றை உபயோகப்படுத்தாமல் விட்டுவிட்டாலே தலைவலி தானாகவே பறந்துவிடும்.

தலைவலி என்பது ஒரு நோயல்ல. உடலில் மறைந்துகொண்டிருக்கும் ஏதோ ஒரு நோயின் அறிகுறியே. மனதில் ஒளிந்திருக்கும் ஏதோ ஒரு பிரச்சினையின் அறிகுறியே.