உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்பு...குவியும் பாராட்டுக்கள்...!
AFP
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வந்தது.
AFP
அங்கு கடந்த 12-ம் தேதி அதிகாலை மண் சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதையின் நடுவில் சிக்கினர்.
AFP
பின்னர் அவர்களை மீட்கும் பணி 17 நாட்கள் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.
AFP
இந்நிலையில் சுரங்கத்தில் சிக்கி தவித்த 41 தொழிலாளர்களும் நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
AFP
சுரங்கத்தில் இருந்து வெளியே வந்த தொழிலாளர்கள் நேரடியாக ஆம்புலன்ஸுக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு அவர்களுக்கு அடிப்படையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
AFP