சாதம் - சப்பாத்தி: இரவில் எது சாப்பிடுவது நல்லது தெரியுமா?

credit: freepik
சப்பாத்தி: சப்பாத்தி தயாரிக்க பயன்படுத்தப்படும் கோதுமை, நார்ச்சத்து மிக்கது. இது மெதுவாக ஜீரணமாகி நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தரும். அதனால் இரவில் சப்பாத்தி சாப்பிடுவது பசியை கட்டுப்படுத்தும்.
credit: freepik
மேலும் இது சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கும். நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல் பருமன் கொண்டவர்களுக்கு சாதத்தை விட சப்பாத்தி சிறந்த தேர்வாக கருதப்படுகிறது.
credit: freepik
அதிகமாக சப்பாத்தி சாப்பிடுவது செரிமானத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே சப்பாத்தியின் அளவை கவனத்தில் கொள்வது அவசியம். இரண்டு அல்லது மூன்று சப்பாத்திகளுக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
credit: freepik
சாதம்: அரிசி சாதம் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவாகக் கருதப்படுகிறது. இதில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால் உடலுக்கு விரைவான ஆற்றலை வழங்குகிறது.
credit: freepik
இரவில் லேசான மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூ டிய உணவை விரும்பினால் அரிசி சாதம் சிறந்த தேர்வாக அமையும். இருப்பினும், வெள்ளை அரிசியில் அதிக கிளைசெமிக் குறியீடு உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக உயர்த்திவிடும்.
credit: freepik
அதனால் நீரிழிவு நோயாளிகள், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர் கள் இரவு உணவில் அரிசி சாதம் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பாலீஷ் செய்யப்படாத பழுப்பு அரிசி சாதம் உட்கொள்ளலாம். அல்லது சிறிதளவு வெள்ளை அரிசி சாதம் சாப்பிடலாம்.
credit: freepik
எது சிறந்தது? நாள் முழுவதும் உடல் ரீதியாக கடினமாக உழைப்பவர்கள் இரவில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவாக குறைந்த அளவு சாதம் சாப்பிடுவது நல்லது.
credit: freepik
இருப்பினும் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வுடன் இருக்க வேண்டும் அல்லது உடல் எடையை சீராக நிர்வகிக்க வேண்டும் என்று விரும்பினால் சப்பாத்தியை உட்கொள்வது சிறந்தது.
credit: freepik
Explore