ரோபோ சங்கர்: ஆணழகனாக தொடங்கி, ஆழ்ந்த இரங்கலில் முடிந்த வாழ்க்கை ..!
சங்கர் கிராமத்து நிகழ்ச்சிகளில் ரோபோ நடனம் ஆடி ரோபோ சங்கர் என்ற பெயரை பெற்றார்.
இளமைக் காலத்தில் மதுரையில் நடைபெற்ற ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று “மிஸ்டர் மதுரை”, “மிஸ்டர் தமிழ்நாடு” ஆகிய பட்டங்களை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
ரோபோ சங்கர் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டவர்.
டி.வி.யில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ரோபோ சங்கர்.
‘தீபாவளி' திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு வந்தார். தொடர்ந்து ‘மாரி', ‘விஸ்வாசம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பின் திறமையால் அம்பி' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த படம் விரைவில் ரிலீசுக்கு வர உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய் போன்ற பிரச்சினைகளால் சிரமப்பட்டார்.
இந்நிலையில் (18 .09 .2025 )அன்று இரவு 8.30 மணியளவில் காலமானார்.