வாட்டி வதைக்கும் வெயில்:பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
எதாவது முக்கிய வேலையாக செல்கிறீர்கள் என்றால் அதற்கு ஏற்றவாறு தங்களை பாதுகாக்கும் விதமாக குடை,துண்டு எதாவது எடுத்து செல்வது நல்லது.
வெளியே செல்லும் பொது தண்ணீர் அதிகமாக அருந்துவது நல்லது.
ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பதன் மூலம் உடலில் உள்ள வெப்ப நிலையை குறைக்கலாம்.
வெயில் காலத்தில் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.இதனால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
நீங்கள் அணியும் ஆடைகள் பருத்தியினால் நெய்ததாக இருக்க வேண்டும். இவை உடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்ற முக்கிய பங்காற்றும்.