தென்காசி மாவட்டம் குற்றால அருவி சுற்றுலா பயணிகளுக்கு கனவு இடம் என்று சொல்லலாம்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்து இருக்கும் குற்றாலத்தில் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி ஆகிய அருவிகள் உள்ளன.
விடுமுறை தினத்தில் செலவு அதிகம் இல்லாமல் ஜாலியான குளியல் போட்டுவிட்டு வர நினைக்கும் சுற்றுலாப் பயணிகள் பலரும் குற்றாலம் செல்லவே விரும்புவார்கள்.
தற்போது முக்கிய அருவிகளான ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி, மெயின் அருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது
குற்றாலம் அமைதியான சூழல் மற்றும் ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சிகள், இயற்கை ஆர்வலர்களுக்கும் சாகச ஆர்வலர்களுக்கும் ஏற்ற சுற்றுலாத்தலமாகும்.
குற்றாலம் நீர்விழ்ச்சி தண்ணீர் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டவை என்று நம்பப்படுகிறது மற்றும் புத்துணர்ச்சி மற்றும் ஓய்வெடுக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வருகின்றன.
தமிழ்நாடு மட்டுமில்லாமல், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குற்றாலம் வருகை புரிகின்றனர்.