மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற ஏழு..!
மனித வாழ்வில் தேவைகள் ஆயிரம் இருப்பினும் சிலவற்றை இருந்தும் பயனற்றவையாகவே கருதுகின்றனர். அவை ..
வயதான காலத்திலோ, துன்பத்தால் வருந்தும் காலத்திலோ பெற்றோருக்கு உதவாத மகன்.
நல்ல பசி வேளையில் உண்ண முடியாதிருக்கும் உணவு.
தாகத்தைத் தீர்க்க இயலாது நிற்கும் தண்ணீர்.
கணவனின் வரவு - செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத பெண்கள்.
கோபத்தைக் கட்டுப்படுத்தாத அரசர்.
பாடம் போதித்த ஆசிரியரின் உபதேச வழி நிற்காத சீடன்.
நீராட இயலாத நிலையில் பாசி படிந்து கிடக்கும் திருக்குளம்