வாயுத் தொல்லையை விரட்டும் சித்த மருத்துவம்!

வாயுப் பிரச்சினை நீங்க;

தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், உணவை காலந் தவறாமல் எடுக்க வேண்டும்.

சீரகம் (சீர்+அகம்), உடல் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தும் சீரகத் தண்ணீர் தினமும் குடித்து வந்தால் வாயுப் பிரச்சினை குறையும்.

சீரகம், ஓமம், பெருங்காயம், மிளகு, சுக்கு, கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல் இவைகளை வறுத்து பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும். இதை சாதத்துடன் கலந்து உப்பு, நெய் சேர்த்து சாப்பிட வாயுப் பிரச்சினை நீங்கும்.

மோரில், வறுத்த பெருங்காயத்தூள், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து குடிக்கலாம்.

ஓமத் தீநீர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம்.

தீர்வு தரும் சித்த மருத்துவம்;

ஏலாதி சூரணம்-1 டீஸ்பூன் அல்லது இரண்டு மாத்திரை வெந்நீரில் எடுக்க வேண்டும்.

சீரக வில்வாதி லேகியம் அல்லது வில்வாதி லேகியம் -காலை, இரவு சாப்பிட வேண்டும்.

குன்ம குடோரி மெழுகு -250-500 மி.கி. இருவேளை சாப்பிட வேண்டும்.