சில்க் சுமிதா வாழ்க்கை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது.

Instagram: taapsee
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 1980 மற்றும் 90-களில் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் சுமிதா.
இவரது கால்ஷீட்டுகாக தயாரிப்பாளர்கள் காத்து கிடந்த காலம் இருந்தது.
சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே 1996-ல் தற்கொலை செய்து கொண்டு பட உலகை அதிர வைத்தார்.
சில்க் சுமிதாவின் வாழ்க்கை மிலன் இயக்கத்தில் இந்தியில் ‘த டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி 2011-ல் வெளியானது.
இதில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்த வித்யாபாலன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
தற்போது சில்க் சுமிதா வாழ்க்கை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது.
Instagram: taapsee
முதல் பாகத்தை எடுத்த பிரபல இந்தி பட அதிபர் ஏக்தா கபூர் 2-ம் பாகத்தையும் தயாரிக்கிறார்.
Instagram: taapsee
2-ம் பாகத்தில் சில்க் சுமிதாவின் இளம் வயது வாழ்க்கை சம்பவங்கள் இடம்பெறுவதால் வித்யாபாலன் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Instagram: taapsee
எனவே சில்க் சுமிதா வேடத்துக்கு கங்கனா ரணாவத்தை அணுகினர். அவர் நடிக்க மறுத்துவிட்டார்.
Instagram: kanganaranaut
இதையடுத்து டாப்சி, கீர்த்தி சனோன் ஆகியோரிடம் படக்குழுவினர் பேசி வருவதாகவும், டாப்சி நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
Instagram: taapsee