எனது படங்கள் தோல்வி அடைந்ததாக அவதூறு - கங்கனா ரணாவத்
Credit : Instagram@kanganaranaut
தமிழில் 'தாம்தூம்', 'தலைவி' படங்களில் நடித்துள்ளார், கங்கனா ரணாவத்.
Credit : Instagram@kanganaranaut
தற்போது சந்திரமுகி 2-ம் பாகம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
Credit : Instagram@kanganaranaut
இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருவதோடு அவ்வப்போது சர்ச்சை கருத்துகள் வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்துகிறார்.
Credit : Instagram@kanganaranaut
இந்த நிலையில் தனக்கு எதிராக பணம் கொடுத்து அவதூறு பரப்புவதாக தற்போது குற்றம் சாட்டி உள்ளார்.
Credit : Instagram@kanganaranaut
இதுகுறித்து கங்கனா கூறும்போது, “எனது படங்களின் வசூல் நிலவரம் குறித்து தவறான தகவல்கள் பரப்புகின்றனர்.
Credit : Instagram@kanganaranaut
இப்படி செய்பவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
Credit : Instagram@kanganaranaut
இதற்கு பின்னால் ஒரு மாபியா கும்பல் இருக்கிறது.
Credit : Instagram@kanganaranaut
அவர்கள் எனது படங்கள் குறித்து மோசமான தகவல்களை பரப்பி மகிழ்ச்சி அடைகிறார்கள்.
Credit : Instagram@kanganaranaut
ரூ.150 கோடி வசூல் சாதனை செய்த எனது படங்களை தோல்வி படம் என்று பிரசாரம் செய்கின்றனர்.
Credit : Instagram@kanganaranaut
தினமும் எனது படங்கள் தோல்வி என்று 10 முதல் 15 கட்டுரைகள் வருகின்றன.
Credit : Instagram@kanganaranaut
இவ்வாறு இரவும் பகலும் திட்டமிட்டு மற்றவர்களை கெட்டவர்களாகக் காட்ட தங்களின் சொந்த பணத்தை செலவிடுகின்றனர்''என்றார்.
Credit : Instagram@kanganaranaut