முள்ளங்கி ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
முள்ளங்கியில் உள்ள வைட்டமின் ஏ, ஈ, சி, பி6, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் முள்ளங்கி ஜூசை உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால் இந்நோயின் தீவிரம் குறையும்.
முள்ளங்கியில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அந்தோசயினின்களும் அதிகமாக உள்ளன. இது இதயத்திற்கும் மிகவும் நல்லது.
முள்ளங்கி நார்ச்சத்துகளால் நிரம்பியுள்ளன, எனவே இது செரிமான அமைப்பை சீராக வைத்திருக்க உதவும்.
முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
முள்ளங்கி ஜூஸ் அருந்தி வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் முள்ளங்கி ஜூஸ் அருந்தி வந்தால் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.
முள்ளங்கி ​புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் கொண்டுள்ளது.
முள்ளங்கியில் உள்ள இயற்கையான பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பூஞ்சை தொற்றுகளைத் தடுக்கும் திறன் கொண்டது.