கண்களை சுற்றியுள்ள கருமையைப் போக்க சில வழிமுறைகள்..!

நன்கு குளிர்ந்த ஈரமான மெல்லிய துணியை கண்களில் கருமை நிறமிருக்கும் இடங்களில் ஒற்றி ஒற்றி எடுக்கவேண்டும்.
தலையை சற்று தூக்கி வைத்துப் படுக்கவேண்டும். இதனால் கண்ணின் கீழ் இமை வீங்குவது சற்று குறையும்.
போதுமான நேரம் நன்றாகத் தூங்கவேண்டும்.
சூரிய ஒளி கதிர்வீச்சு தடுப்பு க்ரீம்களை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை தடவலாம்.
மது அருந்துவதை குறைக்க வேண்டும்.
புகைப்பழக்கமும் கருமையைக் கூட்டும். எனவே புகைப்பழக்கத்தை குறைக்கவேண்டும்.
வெள்ளரிக்காய்த் துண்டுகளை கருவளையத்தின் மீது தடவி, ஒத்தடம் இடலாம். இதிலுள்ள குளிர்ச்சி கருமையை அதிகமாக்காது.
ஆரோக்கியமான, சத்தான, உணவுப் பொருட்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளவேண்டும்.