தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தவர் தீபிகா படுகோனே.
@deepikapadukone
இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
@deepikapadukone
இந்த நிலையில் தீபிகா படுகோனே அளித்துள்ள பேட்டியில், ''எனது கர்ப்பிணி வாழ்க்கை ஆர்வத்தை கிளப்புகிறது.குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுக்க ஒவ்வொரு நாளையும் ஜாக்கிரதையாக கழிக்கிறேன்.
@deepikapadukone
முன்பு எடை கூடாமல் இருக்க விரும்பிய உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்தேன். ஆனால் இப்போது விரும்பிய எல்லா உணவுகளையும் சாப்பிடுகிறேன்.
@deepikapadukone
என் பெற்றோர் அடிக்கடி வந்து பார்த்து செல்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களோடு நேரத்தை கழிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
@deepikapadukone
பிரசவம் செப்டம்பரில் இருக்கும் என்று டாக்டர் தெரிவித்து இருக்கிறார். பிரசவத்தை நினைத்து கொஞ்சம் டென்ஷனாக இருக்கிறது'' என்றார்.