வயிற்றுப் புண்களால் அவதியா..? இத ட்ரை பண்ணுங்க.. அப்புறம் பாருங்க..!
உணவில் கட்டாயம் தயிர் சேர்க்க வேண்டும். தயிரில் உள்ள "லாக்டோபேசில்லஸ்" என்னும் நன்மை தரும் பாக்டீரியா குடல்புண் தடுப்பிற்கு மிகச் சிறந்தது.
காய்கறிகளில் முட்டைக் கோஸில் உள்ள குளூட்டமைன் (Glutamine) வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை உடையது.
பிரண்டைக் கீரை அல்லது பிரண்டை சூப் வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்வதன் மூலம் குடல்புண் வராமல் தடுக்கலாம்.
நுங்கு, இளநீர் போன்றவற்றை அடிக்கடி பருகி வந்தால் வயிற்றுப்புண்கள் நம்மை நெருங்காமல் பாதுகாக்கலாம்.
சீரகம், கொத்தமல்லி விதைகளை ஊற வைத்த தண்ணீரை அடிக்கடி பருகி வர குடல்புண் விரைவில் குணமடையும்.
கல்யாண பூசணிக்காயின் சதைப்பகுதியை எடுத்து ஜூஸாக்கி குடித்து வர வயிற்றுப்புண் நோய் விரைவில் குணமாகும்.