சும்மாவா காட்டுக்கு ராஜானு சொல்லுறாங்க...சிங்கத்தின் சிறப்பு..!!
பெரிய விலங்கு: சிங்கமானது பூனை பேரினத்தை சேர்ந்தது. பூனை பேரினத்திலேயே, புலிக்கு அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு இதுவாகும்.
ஆண் சிங்கம் 150 முதல் 250 கிலோ வரை எடையும், பெண் சிங்கம் 120 முதல் 150 கிலோ எடை கொண்டதாக உள்ளது.
கேட்கும் திறன்; இவை நல்ல கேட்கும் திறன் கொண்டவை. மேலும் இதன் கர்ஜனை சுமார் 8 கி. மீ. வரை கேட்கும் திறன் கொண்டது. விலங்குகளில் சிங்கம் கூட்டமாக வாழும் இயல்புடையது.
ஆயுட்காலம் : சிங்கங்களின் ஆயுட்காலம் 10 முதல் 14 ஆண்டுகள் ஆகும். ஆண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 12 ஆண்டுகள். பெண் சிங்கங்களின் ஆயுட்காலம் 16 ஆண்டுகள் ஆகும்.
விதி விலக்கு : ஒரு கூட்டத்தில் பொதுவாக 6 வயது வந்த பெண் சிங்கங்களும், 1 வயது வந்த ஆண் சிங்கங்களும், சில குட்டிகளும் இருக்கும். கூட்டத்தின் அமைப்பில் பெண் சிங்கங்களே அதிக முக்கியத்துவத்தை பெறுகின்றன.