ஆச்சரியம் ஆனால் உண்மை.. கங்காரு பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் இதோ!

ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான கங்காரு மிகவும் புகழ்பெற்ற வனவிலங்குகளில் ஒன்றாகும். இது உலகின் மிகப்பெரிய குதிக்கும் விலங்கு.
கங்காரு இரண்டு கால்களை காற்றில் உயர்த்திக் குதிக்கும்போது வேகமாக ஓடும். நான்கு கால்களையும் தரையில் வைத்து நடக்கும்போது மெதுவாகவே நடக்கும்.
கங்காரு தனது உயரத்தை விட மூன்று மடங்கு உயரம் தாவிக் குதிக்கும் வல்லமை படைத்தது. கங்காருவுக்கு நீந்தும் திறன் உண்டு.
கங்காரு, தாவரங்களில் ஈரத்தன்மை அதிகம் உள்ள தாவரங்களைச் சாப்பிடும். அப்போதுதான் நீண்டநேரம் அதனால் நீர் இல்லாமல் இருக்க முடியும்.
கங்காருவின் பற்கள் விசேஷமானவை. பழுதுபட்ட கடைவாய்ப் பற்கள் முழுமையாக உதிர்ந்து, மீண்டும் மீண்டும் வளரும் தகவமைப்பை பெற்றுள்ளன.
கங்காருகள் கூட்டமாக வாழக்கூடியவை. ஒரு கூட்டத்தில் 10 முதல் 50 கங்காருகள் வரை இருக்கும். ஆண் விலங்குகளுக்குள் ஆதிக்கத்தை நிலைநாட்ட சண்டையும் நடக்கும்.
வயிற்றில் பையுடைய இந்தப் பாலூட்டிகள், ஆஸ்திரேலியா கண்டத்திலும் நியூ கினியா பிரதேசத்திலும் அதிகம் காணப்படுகின்றன.
காட்டில் வாழக்கூடிய கங்காரு அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் வாழும்.