2024-2025ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்: தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு.
விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி ஒதுக்கீடு.
களர் அமில நிலங்களை சீர்படுத்த ரூ.22.50 கோடி ஒதுக்கீடு.
பருத்தி சாகுபடி திட்டத்திற்கு ரூ.14.20 கோடி ஒதுக்கீடு.
அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி ஒதுக்கீடு.
ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டு கடனுக்கான வட்டி மானியத்துடன் ரூ.200 கோடி ஒதுக்கீடு.
விவசாயிகள் பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ.9.40 கோடி ஒதுக்கீடு.
எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி ஒதுக்கீடு.
ஆடாதொடா, நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்களை வளர்த்திட ரூ.1 கோடி ஒதுக்கீடு.
தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்குவதற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு.