"தமிழக வெற்றி கழகம்": கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
நடிகர் விஜய் "தமிழக வெற்றி கழகம்" என்ற புதிய கட்சியை டெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.
"2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு' - விஜய்
"என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி"- விஜய்
"அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்துகொள்ள என்னை தயார்படுத்தி வருகிறேன்". -விஜய்
"அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தவே விரும்புகிறேன்" -விஜய்
"என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள திரைப்படத்தை முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்"-விஜய்