சலோ பேரணியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு..!
பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு டிராக்டர்களில் படையெடுத்து கிளம்பி உள்ளனர்.
மத்திய அரசைக் கண்டித்து டெல்லி சலோ பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளின் வாகனங்களை பஞ்சர் ஆக்கும்வகையில், சாலையில் ஆணிகள் மற்றும் முள்கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் எல்லை பகுதிகளில் 5 ஆயிரம் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி-ரோதக் சாலையில் துணை ராணுவப்படை நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பஞ்சாப்- அரியானா ஷம்பு எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசி அவர்களை போலீசார் கலைத்து வருகின்றனர்.
இதன்படி விவசாயிகளை கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கைது செய்யப்பட்ட விவசாயிகளை அடைப்பதற்காக, 2 விளையாட்டு மைதானங்களை தற்காலிக சிறைகளாக மாற்றி உள்ளனர்.