தைப்பூசத் திருவிழா; முருகனின் அருள் பெற செல்ல வேண்டிய கோவில்கள்!

Photo: wikipedia
திருப்பரங்குன்றம் - ஆறுபடை வீடுகளில் முதன்மையானது இது. முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்ற சிறப்புமிக்க தலம் இது. இங்கு தனது மனைவி தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் முருகப்பெருமான் காட்சி தருகிறார்.
Photo: wikipedia
திருச்செந்தூர் - முருகனின் ஆறு படை வீடுகளில், இது கடலோரத்தில் அமைந்துள்ள தனித்துவமான தலம். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
Photo: wikipedia
பழனி - அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி கோவிலில் முருகப் பெருமான் இங்கு துறவியின் கோலத்தில், கையில் தண்டாயுதத்துடன் அருள்பாலிக்கிறார். முருகப் பெருமானுக்கு எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் தனிச்சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுபவர் பழனி முருகன்.
Photo: wikipedia
சுவாமிமலை: அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்வது, சுவாமிமலை திருத்தலம். குருவாக இருந்து தனது தந்தை சிவபெருமானுக்கு, முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக புராண தகவல்கள் தெரிவிக்கின்றன.
Photo: wikipedia
திருத்தணி: அறுபடை வீடுகளில் 5-வது படைவீடான திருத்தணி, ஆவேசமாக இருந்த முருகப்பெருமான், தன்னுடைய கோபம் தணிய வந்து அமர்ந்த தலம் . முருகப்பெருமான், வள்ளியை மணம் புரிந்து கொண்டதும் இந்தத் தலத்தில்தான்.
Photo: wikipedia
பழமுதிர்சோலை: முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் கடைசி மற்றும் ஆறாவது படைவீடாகும். முருகப்பெருமான் சிறுவனாக வந்து ஔவையாரை சோதித்து, 'சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா' என்று கேட்டு ஞானம் வழங்கிய சிறப்பு தலம்.
Photo: wikipedia
சென்னை வடபழனி: தென்பழனிக்கு செல்ல முடியாதவர்கள் வடபழனிக்கு வந்து வழிபட்டு, குறைகளை நீக்கிக் கொள்வதாக நம்பிக்கை. இது அறுபடை வீடுகளுக்கு இணையாகக் கருதப்படும் ஒரு முக்கிய முருகன் கோவிலாகும்
Photo: wikipedia
சிறுவாபுரி - இந்த சிறுவாபுரி கோவிலில் உள்ள முருகனை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு, வீடு கட்டும் யோகம் கைகூடும் என்பது பலரின் அனுபவமாகவும், அசைக்க முடியாத நம்பிக்கையாகவும் உள்ளது.
Photo: wikipedia
Explore