ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது பெயரை ஷ்ரத்தா ரமா ஸ்ரீநாத் என மாற்றிக் கொள்ளப் போவதாக டுவிட்டரில் அறிவித்தார்.
Instagram: shraddhasrinath
ரமா என்பது தனது அம்மா பெயர் என்றும் இன்ஸ்டாகிராமில் பெயரை ஏற்கனவே மாற்றி விட்டதாகவும், தற்போது ட்விட்டரிலும் மாற்ற முடிவு செய்து இருக்கிறேன் என்றும் பதிவிட்டார்.
Instagram: shraddhasrinath
ஷ்ரத்தா ஸ்ரீநாத் பதிவை பார்த்த ரசிகர்கள் வலைத்தளத்தில் அவரை கேலி செய்தனர். அவதூறாக விமர்சித்தும் பதிவுகள் வெளியிட்டனர்.
Instagram: shraddhasrinath
இந்த பதிவுகளை பார்த்து கடுப்பான ஷ்ரத்தா ஸ்ரீநாத் “உங்கள் கேவலமான பதிவுகளுக்கு நன்றி. இனிமேல் 4 மாதத்துக்கு டுவிட்டர் பக்கம் வரமாட்டேன்” என பதிவிட்டார்.
Instagram: shraddhasrinath
அதையும் சிலர் கேலி செய்து, நீங்கள் வராவிட்டால் டுவிட்டர் நஷ்டமாகி விடும். கிளம்புங்க காத்து வரட்டும் என பதிவிட்டனர்.
Instagram: shraddhasrinath
இன்னும் சிலர் விமர்சனத்தை கண்டு கொள்ள வேண்டாம் என்று ஷ்ரத்தாவுக்கு ஆறுதல் தெரிவித்து உள்ளனர்.