அவித்த வேர்க்கடலையில் கொட்டிக்கிடக்கும் கோடி நன்மைகள்..!
உடல் ஆரோக்கியத்தை காக்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்த வேர்க்கடலையை அவித்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
அவித்த வேர்க்கடலை பாஸ்பரஸ், மெக்னீசியத்தின் சிறந்த மூலமாகும். இது எலும்புகளின் வலிமை மற்றும் உறுதி தன்மைக்கு வழிவகுக்கும்.
அவித்த வேர்க்கடலையில் காணப்படும் ஆரோக்கிய கொழுப்புகள், சீரான ரத்த ஓட்டத்தை உறுதி செய்து ரத்த அழுத்த பிரச்சினைகளை தடுக்கிறது.
அவித்த வேர்க்கடலை மூளையின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டிற்கு சிறந்து விளங்குகிறது.
அவித்த வேர்க்கடலை, உடலில் இன்சுலின் அளவை மேம்படுத்தி, ரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்க துணைபுரியும்.
அவித்த வேர்க்கடலையில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது செரிமான மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது
ஆரோக்கியமான உடல் எடைக்கு அவித்த வேர்க்கடலை சிறந்த தேர்வாகும்.
அவித்த வேர்க்கடலை ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்.