பலாப்பழ கொட்டைகளில் கொட்டி கிடக்கும் நன்மைகள்..!
பலாப்பழ கொட்டைகளில் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.
பலாப்பழ கொட்டைகளில் நிறைந்திருக்கும் இரும்புச்சத்து உடலில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தி ரத்த சோகை பிரச்சினையை குணமாக்கும்.
இதில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளன. இது மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்சினைகளை தடுக்க உதவுகிறது.
இதில் அதிகம் அளவு புரதச்சத்து இருப்பதால், இது தலைமுடி உதிர்வதை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.
பலாப்பழ கொட்டைகளில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது பார்வை திறனை மேம்படுத்துகிறது மற்றும் கண்புரை, மாகுலர் சிதைவு போன்ற கண் பிரச்சினைகளை தடுக்கிறது.
பலாப்பழ கொட்டைகளில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் வயதான தோற்றம் மற்றும் சரும சுருக்கங்களை எதிர்த்து போராட உதவி புரிகிறது.