எண்ணெய் குளியலால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்!

குறைந்தபட்சம் வாரம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல் நலத்திற்கு ஏற்றது.

எண்ணெய் தேய்த்த பின்னர் சுமார் 1-2 மணி நேரம் வெயிலில் காய வேண்டும்.அதன் பிறகு வெந்நீரில் குளித்து ஓய்வெடுக்க வேண்டும்.

எண்ணெய் தேய்த்து வெயிலில் காய்ந்த பிறகு குளிப்பதால், உடலில் இரத்த ஓட்டம் சீராகும். தசைகள் நெகிழ்ந்து நன்றாக செயல்படும்.

அதீத சூட்டை தணித்து ஆண்மை குறைபாட்டை சரி செய்து உடலுக்கு வலிமையை கொடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், வியர்வை மூலம் தோலிலுள்ள கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு விடுகிறது.

தலையில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக முடி உதிர்தல், இளநரை, வழுக்கை ஆகிய பாதிப்பு ஏற்படுகிறது. எண்ணெய் குளியல் இந்த பிரச்சினைகளை சரிசெய்கிறது

எண்ணெய் உடலின் சூட்டை சமநிலைக்கு கொண்டு வருவதால் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணர்ச்சிகள், கொதிப்பு நிலை குறைகிறது.

எலும்புகள் பலம் பெறும். சருமம் பொலிவுடனும் பாதுகாப்பாகவும் திகழும். தலை முடிக்கும் வலு சேர்க்கும். கண்களின் ஒளி கூடும்.

எண்ணெய் முழுக்கு செய்த நாளில் பகல் தூக்கம், குளிர்பானங்கள் அருந்துதல், வெயிலில் அலைதல், கடின வேலைகளை மேற்கொள்ளுதல், முதலியன கூடாது.