உடலுக்கு குளிர்ச்சி தரும் புடலங்காய் ராய்த்தா..!
கோடைகாலத்தில் உடல் சூட்டை தனித்து குளிர்ச்சியாக வைக்க உதவும் புடலங்காய் ராய்த்தா செய்வது எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: புடலங்காய் , பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் , கடுகு, உளுந்து, தேங்காய்த் துருவல் , கெட்டித் தயிர், பொடியாக நறுக்கிய கொத்த மல்லித்தழை, எண்ணெய், உப்பு ஆகியவை.
செய்முறை: புடலங்காய், சின்ன வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் புடலங்காயை சேர்த்து மிதமான தீயில் வைத்து லேசாக வதக்க வேண்டும்.
பின் அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
இதனைப் பரிமாறும்போது கெட்டித் தயிர், உப்பு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.