சிறுநீரை அடக்கி வைப்பதால் ஏற்படும் விளைவு..!
சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளில் ஒன்று இடுப்பு தசைகள் பலவீனமடைதல் ஆகும்.
நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், ஒருவித அசவுகரியத்தை உணரக்கூடும்.
சீறுநீரை அடக்கி வைப்பதால் அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.
சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருந்தால், கவனச்சிதறல் ஏற்படும். கவனச்சிதறல் மிகவும் ஆபத்தானது. கவனச்சிதறல் ஏற்பட்டால், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாது.
நீண்ட நேரம் சிறுநீரை வைத்திருக்கும் போது சிறுநீரக் கற்கள் உண்டாகும் அபாயம் அதிகரிக்கலாம்.
வெகுநேரம் சிறுநீரை அடக்கினால், சிறுநீர்ப்பை நிறைந்து, பின் சிறுநீர்ப்பையில் தீவிர நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும்.
இப்பழக்கம் நீடித்தால், சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து, தாங்கும் திறன் இழக்கப்படும்.
இதுவே நாளடைவில் உடல் முழுவதும் சிறுநீரில் உள்ள நச்சுக்களை பரவச் செய்து உடலில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
சிறுநீர்ப்பை நீண்ட நேரம் நிறைந்திருந்தால், அது சிறுநீரகத்தை பாதித்து, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடும்.