வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்!
credit: wikipedia
தேநீரில் டானின் என்ற சேர்மம் உள்ளது. இது சாப்பிடும் உணவில் இருந்து உடலுக்கு இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதை தடுத்துவிடும். மேலும் இதில் உள்ள காபினும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் அளவை குறைத்துவிடும்.
credit: wikipedia
தேநீரில் உள்ள தியோபிலின் என்ற ரசாயனப் பொருளும் நீரிழப்பை அதிகப் படுத்திவிடும். மேலும் இது மலச்சிக்கலுக்கும் வழிவகுத்துவிடும்.
credit: wikipedia
வெறும் வயிற்றில் தேநீர் பருகுவது செரிமான அமைப்புக்கு இடையூறை ஏற்படுத்தும். வாயு தொந்தரவையும் உண்டாக்கும்.
credit: wikipedia
தேநீரில் இருக்கும் டையூரிடிக் சேர்மம், அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு வழிவகுத்துவிடும். அப்படி சிறுநீர் கழிப்பது உடலில் நீரிழப்பை உண்டாகிவிடும்.
credit: wikipedia
தலைவலியால் அவதிப்படுபவர்கள் அதனை கட்டுப்படுத்த டீ பருகி இருக்கலாம். ஆனால் டீயில் காபின் இருப்பதால் எதிர்பார்க்கும் பலனை தராது.
credit: wikipedia
வெறும் வயிற்றில் டீ பருகும்போது வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் குடலுக்கு கடத்தப்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
credit: wikipedia
தேநீரில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்க்கலாம். வெல்லத்தில் பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது எளிதில் செரிமானம் நடைபெறுவதற்கும் வித்திடும்.