கற்பூரவள்ளி வாழைப்பழத்தில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!
கற்பூரவள்ளி வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ , பி6 மற்றும் வைட்டமின் சி நிறைவாக உள்ளன. மேலும் மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்கிறது.
தினமும் காலை உணவுடன் கற்பூரவள்ளி பழத்தை சாப்பிட்டு வந்தால் இது நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க தேவையான ஆற்றலை வழங்கும்.
மூளை ஆற்றலை அதிகரிக்க செய்கிறது.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
தோலில் உண்டாகும் புண்கள், சொறி, சிரங்குகள் போன்றவவை குணமாக கற்பூரவள்ளி சாப்பிட்டு வரலாம்.
இதில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் போன்றவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கிறது.
செரிமானத்தை தூண்டும் பண்புகள் கற்பூரவள்ளியில் தாராளமாக இருக்கிறது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கற்பூரவள்ளி பழத்தில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 இருப்பதால் இவை உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.
கவனச்சிதறல், தூக்கமின்மை பிரச்சினைகளை சந்திப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.