40-வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை நயன்தாராவின் கடந்து வந்த பாதை!

@NayantharaU
கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா, தமிழில் 2005-ல் 'ஐயா' படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானார்.
@NayantharaU
தொடர்ந்து சந்திரமுகி, கஜினி, பில்லா 2, யாரடி நீ மோகினி என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார்
@NayantharaU
2018-ம் ஆண்டில் போர்ஸ் இதழில் இடம்பிடித்த டாப் 100 லிஸ்டில் இடம்பிடித்த ஒரே தென்னிந்திய நடிகை என்ற பெருமையும் பெற்றார்
@NayantharaU
இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் 2022-ல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
@NayantharaU
திருமணத்திற்கு பிறகு, பாலிவுட்டில் அறிமுகமான முதல் படமான ஜவான் படத்தில் நடிகர் ஷாருக்கானுடன் சேர்ந்து நடித்து மாபெரும் வெற்றியை கொடுத்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
@NayantharaU
நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ஒரு ஆவணப்படம் தயாராகி உள்ளது.
@NayantharaU
இந்நிலையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் சிறு காட்சியை பயன்படுத்த ரூ. 10 கோடி இழப்பீடு கேட்பதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.
@NayantharaU
இந்த சர்ச்சைக்கு பிறகு 'நயன்தாரா - பியாண்ட் தி பேரி டேல்' என்ற அவரின் ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது
@NayantharaU
நயன்தாரா இன்று 40-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது புதிய படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு 'ராக்காயி' என பெயரிடப்பட்டுள்ளது.
@NayantharaU