தலைமுடி கொட்டுவதற்கான முக்கிய காரணங்கள்!

வயது கூடக்கூட முடி கொட்டுவது இயற்கையாகவே நடக்கத்தான் செய்யும். திடீரென்று உடல் எடை குறைந்தால் தலைமுடி கொட்ட வாய்ப்புண்டு.
அதிக மன அழுத்தம், தலைமுடியை அதிகமாக பிய்த்துக் கொள்வது, டென்ஷன் போன்றவையும் தலைமுடியைக் கொட்டச் செய்யும்.
தலையில் ஏற்படும் தோல் நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறையும் சமயம், இன்னும் சில காரணங்களினாலும் தலைமுடி கொட்டலாம்.
போதுமான, தேவையான சரிவிகித சத்துணவு உடலுக்குக் கிடைக்காவிட்டாலும் தலைமுடி கொட்டும்.
ஹேர் டை, ஹேர் ஷாம்பு, ஹேர் க்ரீம் இன்னும் தலைமுடியைப் பாதுகாக்க என்னென்ன ரசாயனம் கலந்த பொருட்களை உபயோகிக்கிறீர்களோ, அவை எல்லாமே பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும்.
அப்பாவுக்கு தலை வழுக்கை, தலைமுடி அதிகமாக கொட்டுதல் இருந்தால், பிள்ளைகளுக்கும் அதே ஸ்டைலில் கொட்டும்.
புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கு தலைமுடி முழுவதும் கொட்டிவிடும்.
பெண்களைப் பொறுத்தவரை கர்ப்பகாலம், பிரசவகாலம், தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள், இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் இவர்களுக்கெல்லாம் தலைமுடி தற்காலிகமாகவோ, அல்லது நிரந்தரமாகவோ கொட்டலாம்.