ஜவ்வரிசியில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்..!

இதில் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம் போன்ற முக்கிய தாதுக்கள் நிறைந்துள்ளன.
ஜவ்வரிசியில் அதிகளவு கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.
இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிக்க ஜவ்வரிசி சிறந்த தேர்வாகும்.
எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் ஜவ்வரிசி முக்கிய பங்காற்றுகிறது.
ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் நிறைந்துள்ளது. இவை ரத்த ஓட்டத்தை சீராக வைத்து, ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
உடல் சூட்டை குறைத்து, குளிர்ச்சிப்படுத்துவதில் ஜவ்வரிசி முக்கிய பங்காற்றுகிறது.
இது உடலில் சேதமடைந்த திசுக்கள் மற்றும் செல்களை குணப்படுத்த உதவி, மற்ற செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
செரிமான ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில் ஜவ்வரிசி முக்கிய பங்கு வகிக்கிறது.