பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நாளை கோலாகலமாக தொடக்கம்..!
முதன் முதலில் கி.மு. 8-ம் நூற்றாண்டில் ஏதென்சில் ஒலிம்பியா என்ற இடத்தில்தான் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன.
அதன்பிறகு தொடர்ந்து ஒலிம்பிக்கின் 33-வது போட்டி பாரீஸ் நகரில் நாளை தொடங்கி ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி வரை 19 நாட்கள் நடக்கிறது.
இந்த ஒலிம்பிக்கில் மொத்தம் 206 நாடுகள் பங்குபெறும் இந்த போட்டியில் 10,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் களம் இறங்குகிறார்கள்.
இந்தியாவின் பங்களிப்பு : ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மொத்தம் 117, அதில் 70 ஆண்களும், 47 பெண்களும் கலந்துகொள்கிறார்கள்.
கடந்த முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்த முறை இரட்டை இலக்கத்தில் பதக்கங்களை குவிக்க இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.