இன்று பிறந்தநாள் காணும் யுவராஜ் சிங் கடந்து வந்த பாதை..!

பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த பெருமைக்குரியவர்.
2000 ஐசிசி ஜூனியர் உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற அவர் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.
இளம் வயதிலேயே கங்குலி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நிரந்தர இடத்தை பிடிக்கும் அளவுக்கு அசத்தினார்.
தென்னாபிரிக்காவில் 2007ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் பிராட்க்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து உலக சாதனையை படைத்துள்ளார்.
இவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்சர் மற்றும் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் ஆகிய இரட்டை உலக சாதனைகளை படைத்தார்.
இந்திய கிரிக்கெட் கவுன்சில் யுவராஜை பெருமைப்படுத்தும் விதமாக 2012 -ல் அர்ஜுனா விருதை அளித்தது. இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருதை கொடுத்து பெருமைப்படுத்தியுள்ளது.
முதல் (2008 ) ஐ.பி.எல் சீசனில் பஞ்சாப் அணியின் நிர்வாகம் அவரை ஏலத்தில் எடுத்தது. பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார். மேலும் ஐ.பி எல்-ல் மட்டும் 6 அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
2011 உலகக் கோப்பையில் 362 ரன்களையும் 15 விக்கெட்டுகளையும் எடுத்த அவர் 28 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.
தமக்கு புற்றுநோய் இருந்தும் அதை பொருட்படுத்தாமல் நாட்டுக்காக அவர் விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் 2019-ல் ஓய்வு பெற்று அவ்வப்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.