இன்று பிறந்தநாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்து வந்த பாதை..!
சிவாஜி ராவ் கெய்க்வாட் என்னும் இயற்பெயரில் 1950-ஆம் ஆண்டு டிசம்பர் 12 ம் தேதி பெங்களூரு மாநிலத்தின் மைசூர் நகரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், ஏழை குடும்பத்தில் பிறந்துள்ளார்.
இவர் இயக்குனர் கே. பாலச்சந்தரின் "அபூர்வ ராகங்கள்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
தொடர்ந்து துணை நடிகர் மற்றும் வில்லனாக பல கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ள இவர், "சிலக்கம்மா செப்பிந்தி" என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகினார். இத்திரைப்படமே ஹீரோவாக இவர் நடித்த முதல் திரைப்படம் ஆகும்.
இவர் தன்னுடைய 31 ம் வயதில் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்திய அரசின் உயர் விருதுகளான கலைமாமணி, பத்ம பூஷன், பத்ம விபூஷண் என பல விருதுகளை பெற்றுள்ளார்.
தனது ஸ்டைலான நடிப்பு மற்றும் வசனங்கள் உச்சரிப்பு என ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் கவர்ந்த இவர் தமிழ் திரையுலகில் "சூப்பர் ஸ்டார்" என்னும் பட்டத்தினை பெற்றுள்ளார்.
இவரது திரைப்பயணத்தில் சுமார் 170 திரைப்படங்களுக்கு மேல் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து உலகளவில் புகழ் பெற்றுள்ளார்.