ஒற்றுமை யாத்திரையின் போது ராகுல் காந்தியை கண்டு மகிழ்ந்த மணிப்பூர் மக்கள்..!
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார்.
இந்தநிலையில் ஒற்றுமை யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை மணிப்பூரில் தொடங்கினார்
இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைபெறும் இந்த யாத்திரை மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நடைபயணம் 15 மாநிலங்களில் 6,713 கி.மீ. தூரம் நடைபெறும். இந்த யாத்திரை 67 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் ராகுல் காந்தியுடன் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொள்கிறார்கள்.
முன்னதாக இந்த யாத்திரையை மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது.
ஆனால் அங்கு அனுமதி வழங்குவதில் மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்தது.
இதைத்தொடர்ந்து தவுபல் மாவட்டத்தில் இருந்து இந்த யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது.
பின்னர் மணிப்பூர் மக்கள் ராகுல் காந்தியை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அங்குள்ள குழந்தைகள் ராகுல் காந்தியை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
பின்னர் அங்குள்ள கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.
மணிப்பூர் மக்களிடம்,உங்கள் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மொழியை நாங்கள் பாதுகாப்போம் என்று கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களைக் கேட்டறிந்து, மாநிலத்தில் அமைதிக்காக போராடுவதாக உறுதியளித்தார்.