உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகையின் சிறப்பு!
அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியை வெல்லம், பால், நெய் சேர்த்துப் புது பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.
பொங்கல் பண்டிகையின் போதும் படையல் வைப்பது முக்கிய அங்கமாக உள்ளது. இந்த திருநாளில், புதுப்பானையில் பொங்கல் வைத்து படையலிடும் காட்சியே ரசனைக்குரியதாக இருக்கும்.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், பனைத் தொழில் சார்ந்து வாழும் பல மாவட்டங்களிலும் இந்த படையலில் கட்டாயம் இடம்பெறும் பொருட்களில் பனங்கிழங்கு முதன்மையானது.
இந்த திருநாளில் மஞ்சள் கொத்து, இஞ்சிக்கொத்து, கரும்பு, வாழை, நெல் ஆகிய விளைபயிர்களுக்கு முக்கிய இடமுண்டு. அதில் மஞ்சள் கொத்துக்கு முதலிடம்.
தமிழர் தம் உணவானது எவ்வளவு சிறப்பு மிக்கதாக இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். மருத்துவக் குணம் கொண்ட உணவுப் பொருளுடன் சமைக்கப்படும் உணவே நம்முடைய பாரம்பரிய உணவு முறை ஆகும்.
பொங்கல் பண்டிகைக்கு பொலிவும், தித்திப்பும் சேர்க்கும் கரும்பு நாட்டின் பழமையான பயிர் மற்றும் நமது பாரம்பரியத்துடன் நீண்ட நெடிய தொடர்பு கொண்டது.
அதியமானின் முன்னோர்களில் ஒருவர், வெளிநாட்டிலிருந்து கரும்பை கொண்டு வந்ததாக புறநானூற்றில் கூறப்பட்டிருக்கிறது. முதன் முதலில் கரும்பு பயிரிடப்பட்ட பகுதி தர்மபுரி மாவட்டம்.