2025-ம் ஆண்டில் அதிக வசூலைப் பெற்றுத் தந்த டாப் 05 கதாநாயகிகள்.!!
திரை உலகில் கதாநாயகர்களால் படங்கள் வெற்றி பெற்று நல்ல வசூலை பெறுவது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த ஆண்டு கதாநாயகிகளின் ஆதிக்கத்தில் பல படங்கள் வெற்றி பெற்று ரூ.1000 கோடி வசூலை பெற்றுள்ளது.
2025-ம் ஆண்டு கதாநாயகிகளுக்கு ஒரு பொற்காலமாக அமைந்துள்ளது. அதிக வசூல் பெற்று தந்த 5 கதாநாயகிகள் விபரம் வருமாறு..
ராஷ்மிகா மந்தனா :சாவா, சிக்கந்தர், தம்மா மற்றும் குபேரா, தி கேர்ள் பிரெண்ட் போன்ற படங்களில் நடித்து ரூ.1347.71 கோடி வசூலை பெற்று தந்துள்ளார்.
ருக்மினி வசந்த்: காந்தாரா அத்தியாயம் 1, ஏஸ், மதராசி ஆகிய மூன்று படங்களில் நடித்து, ரூ.963.33 கோடி வசூல் பெற்று தந்துள்ளார்.
சாரா அர்ஜுன்:- ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன். முதல் படத்திலேயே ரூ.836.75 கோடி வசூலை பெற்று தந்துள்ளார்.
அனீத் பத்தா நடிப்பில் வெளியான சாயாரா ரூ.570.33 கோடி வசூலை பெற்று கொடுத்துள்ளார்.
கியாரா அத்வானி நடித்துள்ள கேம் சேஞ்சர், வார்2 படங்கள் நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும் ரூ.550.63 கோடி வசூலை பெற்று இருக்கிறது.