2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 08 வார்த்தைகள்..!
2025-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக ஜெம்னை என வெளிநாட்டவர்களால் அழைக்கப்பட்ட ஜெமினி (Gemini) முதலிடத்தில் உள்ளது.
கிரிக்கெட் தொடர் காரணமாக, இந்தியா வெர்சஸ் இங்கிலாந்து (India vs England) என்பது அதிகம் தேடப்பட்ட சொற்களில் இரண்டாவதாக இடம் பிடித்துள்ளது.
அரசியல் விவாதங்கள், பொது நிகழ்வுகளில் அதிகமாக பங்கேற்றது மற்றும் ஊடக வெளிச்சம் ஆகியவற்றின் காரணமாக சார்லி கிர்க் 2025-ல் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.
2025-ம் ஆண்டில் பிபா கிளப் வேர்ல்ட் கப் (FIFA Club World Cup) தொடர்பான தேடல்கள் நான்காவது இடத்தில் உள்ளது.
ஐந்தாவது இடத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியும், அதுதொடர்பான முடிவுகளும் கூகுளில் அதிகம் தேடப்பட்டது.
புதிய செயற்கை நுண்ணறிவு தளங்களையும், தேடல் தொழில்நுட்பங்களையும் மக்கள் அதிகம் தேடியதால் டீப் சீக் (DeepSeek) மக்களின் கவனத்தை ஈர்த்து கூகுள் தேடலில் ஆறாவது இடத்தில் உள்ளது.
2025-ம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிக மக்களை ஈர்த்து கூகுள் தேடலில் ஏழாவது இடத்தில் உள்ளது.
ஐபோன் 17, 2025-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட தொழில்நுட்பம் தொடர்பான சொற்களில் ஒன்றாக மாறி கூகுள் தேடலில் எட்டாவது இடத்தில் உள்ளது.