கடந்த 2009-இல் வெளியான 'தி கிரே மேன்' நாவலை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் திரைப்படத்தை இயக்கியுள்ளனர். திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்விற்கு நடிகர் தனுஷ் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் வந்திருந்தார்.
இதில் முதன்மைக் கதாபாத்திரங்களில் ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கியமாக இதில் இந்திய நடிகர் தனுஷும் நடித்துள்ளார்.
நிகழ்வில் பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி -சட்டை அணிந்து பங்கேற்றார் தனுஷ். இருகரம் கூப்பி வணக்கம் சொல்லும் வகையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
ருஸ்ஸோ சகோதரர்களும் அவருடன் ‘வணக்கம்’ சொல்லும் வகையில் போட்டோ எடுத்துக் கொண்டார்.