குளிர் காலத்தில் பப்பாளி பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா..!

ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பழங்களில் ஒன்றாக இருக்கும் பப்பாளியில் மருத்துவ குணங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக குளிர்காலத்தில் பப்பாளியை டயட்டில் சேர்த்து கொள்ள பல காரணங்கள் உள்ளன.
பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலேட், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது.
இதில் நார்ச்சத்து அதிகளவு காணப்படுகின்றன. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் லுடீன் போன்ற பிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. இவை கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
பப்பாளியில் இருக்கும் நார்ச்சத்து புற்றுநோயை உண்டாக்கும் டாக்ஸின்களை உடலிலிருந்து வெளியேற்றி புற்று நோயை தடுக்க உதவி செய்யும்.
பப்பாளியில் நார்ச்சத்து, விட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்கள் உள்ளன. இவை கெட்ட கொழுப்பை குறைத்து, ஆரோக்கியமான எடை இழப்பிற்கு வழிவகுக்கிறது.
பப்பாளியில் வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளில் இருந்து காக்க உதவுகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தின்போது உடலில் சிக்கல்கள் ஏற்பட்டால் அதற்கு பப்பாளி சிறந்த தீர்வை அளிக்கிறது.
பப்பாளியில் உள்ள நார்ச்சத்தானது உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்க உதவும்.
Explore