'என்னை கேலி செய்யாத, அவமானப்படுத்தாத ஆளே இல்லை' - தனுஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பாடகர் , தயாரிப்பாளர், இயக்குனர் என பல திறமைகளை கொண்டவர்.
தற்போது இவர் இயக்கிய ராயன் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தனுஷ் ஒரு உரையாடலின் போது கூறுகையில்,
''காதல் கொண்டேன்' படப்பிடிப்பின்போது ஹீரோ யார் என்று என்னிடம் கேட்டனர்.
எந்த அவமானத்தையும் சந்திக்கத் தயாராக இல்லை என்பதால் வேறு ஒருவரைச் சுட்டிக்காட்டினேன்.
ஆனால், பிறகு நான்தான் ஹீரோ என்று தெரிந்ததும் படப்பிடிப்பில் இருந்த அனைவரும் என்னைப் பார்த்து சிரித்தனர்.
இந்த சம்பவத்தால் உடைந்து போனேன். பின்னர் காருக்குள் இதை நினைத்து மணிக்கணக்கில் அழுதேன். என்னை கேலி செய்யாத, அவமானப்படுத்தாத ஆளே இல்லை" என்றார்.