வெப்பநிலை அதிகரிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!

கடைப்பிடிக்க வேண்டியவை: பகல் வேளையில் வெளியே செல்வதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செல்ல நேர்ந்தால் நிழற்பாங்கான இடங்களில் நேரத்தை செலவிட வேண்டும்.
அடிக்கடி தண்ணீர் பருகுங்கள். லஸ்ஸி, எலுமிச்சை ஜூஸ், பழ ஜூஸ் பருகுங்கள். நீர்ச்சத்து அதிகம் கொண்ட தர்ப்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரி போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள்
வீட்டை விட்டு வெளியே செல்லும்போது தொப்பி, குடை எடுத்து செல்லுங்கள். மெல்லிய மற்றும் தளர்வான ஆடைகளை அணிய முயற்சியுங்கள்.
தவிர்க்க வேண்டியவை: மதிய வேளை மற்றும் மாலை 3 மணிக்குள் நேரடி சூரிய ஒளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
மதியவேளையில் எந்தவொரு கடினமான உடற்பயிற்சிகளையும் செய்யக்கூடாது.
வெப்ப அலையின் போது காபி, டீ மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள் அருந்துவதை தவிருங்கள்.
செல்லப்பிராணிகளையோ, குழந்தைகளையோ சூரிய ஒளியில் விளையாட அனுமதிக்காதீர்கள்.
அடர் நிற அல்லது இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிருங்கள்.