50 வயதில் வலிமையாக இருக்க 30 வயதில் பின்பற்ற வேண்டியவை!
30 வயது நிரம்பிய ஆண்கள் எதிர்கால வாழ்க்கை ஆரோக்கியமாக அமைய இப்போதே உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்குவது அவசியமானது. அப்போதுதான் 50 வயதிலும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
ஆளி விதை - நினைவாற்றல் : உடலில் ஒமேகா 3 அளவை அதிகரிக்க ஆளி விதை துணை புரியும். இவை அழற்சியை குறைக்க, மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
கோகோ - தசை வலிமை : உடலில் மக்னீசியம் அளவை உயர்த்த கோகோ உதவிடும். தசை செயல்பாட்டை மேம்படுத்தும். தசை பிடிப்பை குறைக்கும்.
யோகர்ட் - நோய் எதிர்ப்பு சக்தி : புளிக்க வைக்கப்பட்ட உணவுகளில் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன. அவை குடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. செரிமான செயல்பாடுகளை மேம்படுத்தக்கூடியவை.
பால் பொருட்கள் - எலும்பு ஆரோக்கியம் : பால் பொருட்களில் வைட்டமின் டி3 உள்ளது. உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு உதவி புரிந்து, எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதற்கு இந்த வைட்டமின் முக்கியமானது.
வேர்க்கடலை - இதய ஆரோக்கியம் : உடலில் கோஎன்சைம் கியூ10 உற்பத்தி அதிகரிப்பதற்கு வேர்க்கடலை முக்கியமானது. இதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும்.
பூசணி விதை - ஹார்மோன் நலன் : பூசணி விதைகளில் துத்தநாகம் மிகுந்திருக்கிறது. ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கு உதவுவதோடு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும்.
மஞ்சள் - அழற்சி : மஞ்சளில் உள்ளடங்கி இருக்கும் முக்கிய மூலப்பொருளான குர்குமின் அழற்சியை குறைத்து, மூட்டு ஆரோக்கியத்தை பலப்படுத்தக்கூடியது. பல்வேறு நாட்பட்ட நோய்களையும் எதிர்க்கவல்லது.