தொப்பையை குறைக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

தொப்பையை குறைக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

Published on
நார்ச்சத்து உணவுகள்: பருப்பு வகைகள், சாலடுகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்களை கொண்டிருக்கும்.
கொழுப்புகளை தவிர்க்கவும்: பேக்கிங் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகம் கலந்திருக்கும். இவற்றை அதிகம் உட்கொள்வது உடல்பருமன், இன்சுலின் பாதிப்பு, இதய நோய் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.
மதுவை தவிர்த்தல்: அதிக ஆல்கஹால் கொண்ட மது வகைகளை உட்கொள்வது இடுப்பின் சுற்றளவை அதிகரிக்க செய்துவிடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
புரதம் அதிகம் உட்கொள்வது: புரதம் உள்ளடங்கிய உணவுகளை அதிகம் உட்கொள்வது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். கொழுப்பின் அளவை குறைத்து தசை கட்டமைப்பை வலுப்படுத்த துணைபுரியும்.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள்: மன அழுத்தம் உடலில் கார்டிசால் உற்பத்தியை தூண்டிவிடும். இது மன அழுத்தம் ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஹார்மோன் சாப்பிடும் உணவின் அளவை அதிகரிக்க செய்யும். கொழுப்பு படிவதை ஊக்குவிக்கும். யோகா, தியானம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம்.
சர்க்கரையை குறையுங்கள்: சர்க்கரைக்கும், உடல் எடை அதிகரிப்புக்கும் நேரடி தொடர்பு உள்ளது. சர்க்கரை முக்கியமாக குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸை உருவாக்குகிறது.
இந்த பிரக்டோஸ் பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. டைப் 2 நீரிழிவு மற்றும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படக்கூடும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com