இந்த வார குக்கிங் டிப்ஸ்..!

இந்த வார குக்கிங் டிப்ஸ்..!

Published on
தேங்காய் மீந்து போனால் அதை தண்ணீரில் போட்டு வைத்தால் பல நாட்கள் கெடாமல் இருக்கும்.
கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினாவை வாழை இலையில் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்.
பயிறு வகைகளை புழு, பூச்சி சேதப்படுத்தாமல் இருக்க விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைக்கவும்.
எந்த சட்னி செய்தாலும் சிறிதளவு பூண்டு சேர்த்தால் மணம் கமகமக்கும்.
தோசை சுடும்போது வாசனையால் ஊரையே ஈர்க்க வேண்டுமா? தோசை வார்க்கும் முன் தோசைக்கல்லில் சிறிது நல்லெண்ணெய் தேய்க்கவும்.
நெய் 'கமகம'வென மணக்கணுமா? நெய் ஜாடியில் சிறிதளவு வெல்லம் போட்டு வைக்கவும்.
முறுக்கு, சீடைக்கு மாவை வெந்நீர் ஊற்றி பிசைந்து பொரித்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
இட்லி மல்லிகைப்பூ போல் இருக்க இட்லி மாவில் ஒரு கரண்டி நெய் சேர்க்கவும்.
வாணலியை சூடாக்கி பின்பு அதில் சாம்பார் வெங்காயத்தை போட்டு சூடு வர புரட்டினால் அதன் தோலினை சுலபமாக உரிக்க இயலும்.

Related Stories

No stories found.
X

logo
Daily Thanthi
www.dailythanthi.com