மூல நோயை விரட்டும் துத்திக்கீரை கூட்டு..!
துத்தி இலை குடல் புண்களை ஆற்றி, மலத்தை இளக்கி வெளியேற்ற உதவுகிறது. துத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் : துத்திக் கீரை, சின்ன வெங்காயம், வேகவைத்த துவரம்பருப்பு, மிளகு தூள், சீரகம், நல்லெண்ணெய், உப்பு- சுவைக்கேற்ப
துத்திக் கீரை, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சிறியதாக அரிந்துகொள்ள வேண்டும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து தாளித்து, வெட்டி வைத்துள்ள வெங்காயம் மற்றும் துத்திக் கீரையை போட்டு வதக்கி சற்று நீர் தெளித்துக் கீரையை வேக விடவேண்டும்.
கீரை வெந்தபின் வேகவைத்த துவரம் பருப்பு, மிளகுத் தூள், உப்பு கலந்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
இந்த கீரையை சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட, மூலநோய் குணமாகும்.
மூலத்தில் உண்டாகும் வலி நீங்கும், மலச்சிக்கல் தீரும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் நீங்கும்.
மூல நோயால் துன்பப்படுபவர்கள் இந்த கீரையை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சமையலில் பயன்படுத்தலாம்.