மருத்துவ குணங்கள் நிறைந்த திப்பிலி..!
திப்பிலியில் ஆல்கலாய்டு கெமோபுரோடெக்டிவ் என்னும் ஆற்றல் இருக்கிறது. இது புற்றுநோய் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.
மாதவிடாய் வலி மற்றும் தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கு சிறந்து விளங்குகிறது.
வாயு பிரச்சினை, நெஞ்சு எரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்சினைகளுக்கு உதவுகிறது.
இதில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது கொழுப்பை கரைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பருவகால நோய்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது.
இது நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது. அதோடு கல்லீரல், சிறுநீரக பாதிப்புகளை சரி செய்யும் தன்மைகொண்டது
வாய் சுகாதாரத்தை பாதுகாப்பதில் திப்பிலி முக்கிய பங்கு வகிக்கிறது. இது பல் வலி, வாய்வழிப் பிரச்சினைகளுக்கு நிவாரணியாக உள்ளது.
இது உடலில் ஏற்படும் வலியைக் குறைத்து, சிறந்த தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.