மூட்டுவலியை குறைக்க முத்தான வழிமுறைகள்...!
ஆப்பிள் சிடர் வினிகர் மூட்டுவலியை குறைக்கும் தன்மை கொண்டது. அதனுடன் தேங்காய் எண்ணெயையும் சம அளவு சேர்த்து மூட்டு பகுதிகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
இஞ்சியும் மூட்டு வலியை விரட்டும் ஆற்றல் கொண்டது. இஞ்சி எண்ணெயை தினமும் இரண்டு முறை மூட்டுகளில் தடவி வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.
இஞ்சியுடன் மஞ்சளை சேர்த்தும் அதை நீரில் கால் மணி நேரம் கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி, தேனுடன் சேர்த்து பருகினால் மூட்டுவலிக்கு தீர்வு காணலாம்.
பாலுடன் மஞ்சள் தூள், சர்க்கரை கலந்தும் இரவில் பருகி வரலாம்.மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது மூட்டுவலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
எலுமிச்சை சாறை நீரில் கலந்தோ, எலுமிச்சை டீயாகவோ பருகி வரலாம். இதுவும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியது.
உடற்பயிற்சி செய்வதால் உங்கள் எழும்புகள் வலுவாகவும்,ஆரோகியமாகவும் காணப்படும்.இது மூட்டுவலி வராமல் தடுக்க உதவுகிறது.